
அருள்பிரியா கிரேகரன், 26, யாழ்ப்பாணத்தில் இருந்து, மீன்கழிவுகளை கோழிகளுக்கான உணவாக மாற்றி புதிய தொழில்முனைவை உருவாக்கியவர். இந்த வணிகம், அக்ரோ ஃபீட், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கை ஆற்றுகிறது மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அருள்பிரியா தனது தொழிலை விரிவுபடுத்தி, பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க விரும்புகிறார். அவரது முயற்சி இலங்கையின் பண்ணை உணவுத் துறையை தன்னிறைவு அடையச் செய்யும் என அவர் நம்புகிறார்.



கழிவிலிருந்து செல்வம் வரை: அருள் பிரியாவின் அக்ரோ ஃபீட் புரட்சி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி அருள் பிரியா கிரேகரன், தனது 26 வயதிலேயே இலங்கையின் வேளாண்மைத் துறையில் புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறார்.
இலங்கையின் மீன்வளத் துறையில் ஏற்படும் கழிவுப் பிரச்சனைக்கு, அருள் பிரியா ஒரு புதுமையான தீர்வை கண்டறிந்துள்ளார்.யாழ் பிரதேசத்தில் மீன்கழிவுகள் ஒரு பிரச்சனையாக மாறிவிடடட நிலையில், அருள்ப்ரியா அதை ஒரு சந்தர்ப்பமாக பார்த்தார்.
அவர் இந்த கழிவுகளை சேகரித்து, அவற்றை ஊட்டச்சத்து மிக்க கோழித் தீவனமாக மாற்றும் புதிய முறையை வியாபாரத்தை நடத்தி வருகின்றார்.
அவரது தொழில் முனைவான அக்ரோ ஃபீட், உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கனடாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கூட இவரது திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
